Saturday, June 20, 2020

முதியோர்கள் இல்லங்களை ஒழிப்போம் ! பெற்றோர்களை கண்ணிப்படுத்துவோம். -தோப்புத்துறை அ.முஹம்மது நூர்தீன்


*அன்னையர் தினம் 2001 மணிச்சுடர் நாளிதழில் வந்த கட்டுரை*முதியோர்கள் இல்லங்களை ஒழிப்போம் !
               பெற்றோர்களை கண்ணிப்படுத்துவோம்.
-தோப்புத்துறை அ.முஹம்மது நூர்தீன்தாய்-தந்தையரிடம் மிக கண்ணியமான முறையில் நடந்து கொள்ளுங்கள். பெற்றோரின் ஒருவரோ இருவருமோ முதுமை அடைந்துவிட்ட நிலையில் உம்மிடம் இருந்தால் அவர்களை "சீ" என்று கூடக் கூறாதீர்" மேலும் அவர்களைக் கடிந்து பேசாதீர்!  மாறாக அவர்களிடம் கண்ணியமாகப் பேசுவீராக" மேலும், பணிவுடனும், கருணையுடனும் அவர்களிடம் நடந்து கொள்வீராக" மேலும் நீர் இறைஞ்சிய வண்ணம் இருப்பீராக என் இறைவனே சிறுவயதில் எவ்வாறு என்னை இவர்கள் கருணைவுடனும், பாசத்துடன் வளர்த்தார்களோ அவ்வாறு இவர்கள் மீது கருணைபுரிவாயாக    (திருக்குர்ஆன் 17: 23, 24)
பெரிய, சிறிய நகரங்கள் முதல் தாலுக்காவின் தலைமையான ஊர்கள் ஏன் சில கிராமங்கள் வரை இன்று முதியோர் இல்லங்கள் / முதியோர் காப்பகங்கள் என்று அறிவிப்பு பலகைகள் நமது கண்களில் அந்த ஊர்களை கடந்து செல்லும் போது தென்படுகின்றன. ஆதரவற்ற பிள்ளைகளுக்கு தான் அநாதைகள் இல்லங்கள்/காப்பகங்கள் என்ற பெயரில் சமுதாயத்தில் தொண்டுள்ளம் படைத்தவர்கள் தங்களின் வருமானத்திலிருந்தோ அல்லது பலரின் கூட்டு முயற்சியில் நடத்தி வருகிறார்கள். வேத காலம் முதல் பல நூற்றாண்டுகளாகவே வயதான தாய்-தந்தையை பெற்ற பிள்ளை துச்சமாக நினைத்து அலட்சியம்படுத்துவதென்பது ஏதோ வழக்கமாக நடக்கும் நிகழ்ச்சியாக போய்விட்டது. இன்றோ வயதான பெற்றோர்களை இளைஞரான மகன் பொருள்படுத்தாமல் இருப்பதன் விளைவாக அவர்களை முதியோர்கள் இல்லங்களுக்கு அனுப்பும் அவலம் நம் நாட்டின்  பொருளாதார வீக்கம் போல் நாளுக்குநாள் கூடிக் கொண்டே போகிறது. இதற்கு நேரடி சாட்சியாக நமக்கு புலப்படுவது பல இடங்களில் புதிதாக தோன்றிவரும் முதியோர் இல்லங்களே.
தமிழ் பொன்மொழியான தனி மரம் தோப்பாகாது, கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்fபதெல்லாம் இன்று திருவிழா நேரங்களிலும், திரையரங்கத்திலும் சரியான முறையில் அனுசரிக்கப்படுகிறது.
முந்தைய கால கூட்டு குடும்fப முறைகள் எல்லாம்f இன்றைய நவீன உலகத்திற்கு ஈடு கொடுக்கும் மனிதர்களின் அதிவேக சுழற்சியால் இருந்த இடம் தெரியாமல் அழிந்து போய் விட்டது. இந்த நிலையில் ஒரு பிள்ளைக்கு மேல்f பெற்ற பெற்றோர்களை பங்கு பிரிப்பது போல்  அவர்களின் பிள்ளைகள் பங்கீடு செய்து வருவது இன்றைய அமைப்பாகி விட்டது.
வீட்டை அலங்கரிக்கும் விதமாகவும், நமது வீட்டு வரவேற்பு அறை முதல் டைனிங் ஹால் வரை பெரிய அளவில் அடுத்தவர்கள் மெச்சு அளவிற்கு இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஹோம் தியேட்டர் டி.வி தொடங்கி  எத்தனையோ வகையில் அவசியமற்ற செலவுகள் செய்கின்றோம். ஆனால் இதுவெல்லாம் வைக்க இடம் இருக்கும் அதே சமயத்தில் இந்த உயர்வுக்கும், நிலைக்கும் காரணமாகவும், குழந்தை  காலம் தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட வயது வரை காப்பாற்றி வளர்த்தவர்களுக்கு ஒர் இடம்  தன் வீட்டில் பிள்ளைகள் ஒதுக்குவதில்லை மாறாக இன்று மதிப்பிட முடியாத பெற்றோர்களை முதியோர் இல்லங்களை தேடி சென்று சேர்க்கும் கேவலமான நிலையில் உள்ளார்கள்.
இவர்கள் தான் வருடத்தில்f ஒரு நாள் தாய்க்கு ஒரு  தினம் "மதர் டே" என்றும் தந்தைக்கு ஒரு தினம் "ஃபாதர் டே" என்பது போன்றே மனைவிக்கு ஒரு தினம் என்று குறிப்பிட்ட நாட்களில் மட்டும் ஏதோ ஒரு பரிசு பொருளை கொடுத்து கொண்டாடுகின்றார்கள். இன்னும் சற்று முன்னோக்கினால் சிலர் நட்சத்திர ஹோட்டலில் "சீயர்ஸ" சொல்லி கூத்து போடும் நிகழ்வுகளை தான் நாம் இன்று அதிக அளவில் பார்க்கின்றோம். இப்போது ஒவ்வொருவருக்கும் ஒரு தினத்தில் மட்டும் ஒரு சிறப்பு தினம் (ஸ்பெசல் டே) கொண்டாடுவது போல் தாய் தன் பிள்ளை சுமந்த காலம் முதல் அவனை பெரியவானாக உருவாக்கும் நேரங்களில் நம் பிள்ளைக்கு வருடத்தில் ஒரு தினத்தில் மட்டுமே ஒரு எடேஎ கொண்டாடி  இருந்து, அன்றைய தினமாத்திரமே தாய் பால் கொடுத்தும் மேலும் தன் பிள்ளையின் மீது ஒரு தினம் மட்டும் அப்படி அக்கரை காட்டியிருந்தால் அந்த பிள்ளையின் நிலை என்ன? இப்போது நடந்து கொள்ளும் பிள்ளைகளாக இவர்கள் வந்து இருக்க முடியுமா?  இப்படியே எடேஎ-க்களாக கொண்டாடியதன் பிரதிபலிப்பாக இன்று சில மனைவிமார்கள் கூட தன் கணவனை "டே(ய்)"போட்டு செல்லமாக அழைக்கும் விதமாக சூழ்நிலைகள் வந்துவிட்டன இதற்கு தொலைகாட்சியில் வரும் தொடர்களே மூலக்காரணம்.
தாய்-தந்தையர்களை பிள்ளைகள் பெரும் சுமையாக எண்ணும் மனப்போக்குக் தொற்றுவியாதியாக பரவி வருகிறது. இதை கண்டு நாம் வெட்கப்பட வேண்டும். இதற்கு காரணம் என்ன? எங்கே இந்த தவறுகள் தொடங்குகின்றன? என்ற பல கேள்விகள் நம்மிடையே வெளிப்பட்டாலும் பெற்றோர்fகளே இந்த கேள்விகளுக்கு பதில் தேடும்  விதமாக பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சிறு வயது முதலே இறை கட்டளைகளையும், உலக நற்பண்புகளையும் எடுத்த கூறி அவர்களை பக்குவப்படுத்த வேண்டும் இதன் பின்பே நாம் எதிர்பார்க்கும் முடிவுகள் கிடைக்கும்.
உலக மக்களை நேர்வழிப்படுத்துவதற்காவே இறுதி தூதர் நபி(ஸல்) அவர்கள் மூலம் இறைவனால் அருளப்பட்ட உலக பொதுமறையில் பெற்றோர்களை பேணுதல் எந்த விதத்தில் இருக்க வேண்டும் என்பதை நம்மை பல இடங்களில் சிந்தித்து பார்க்க தூண்டும் திருக்குர்ஆனின் வேத வசனங்களை சற்று ஆழ்ந்து உணர வேண்டும். எப்படி இறைவன் தொழுகை வழிபாட்டிற்கும், ஜகாத் என்று ஏழைகளுக்கு கொடுத்துவருவதும் ஒன்றன்பின் ஒன்றான தொடர்ச்சியான கடமையாக இறை கட்டளைகள் ஏன் இருக்கிறது என்பதை ஓர் மார்க்க அறிஞர் எளிதான முறையில் காரணங்களை விளக்குகிறார். தொழுகைக்காக நாம் பள்ளிவாசல்களை கட்டுகின்றோம் அதற்கு அடுத்த விஷயமாக ஒவ்வொரு பள்ளிவாசல் அருகிலும் ஒரு பைத்துல்மாவை உருவாக்கி செயல்படுத்தி விட்டால் வறுமை ஒழிந்து விடும் சமுதாயமே நல்ல நிலைக்கு சென்றுவிடும், ஏழைகள், வறியவர்கள் என்ற பாகுபாடுகளை களைவதற்கு தான் இறைவன் தொழுகையை வலியுறுத்தும் போதே ஜகாத் கொடுப்பதை வலியுறுத்துகிறான். இதை போலவே இறைவனுக்கு இணையாக யாரையும் ஆக்கி கொண்டு வழிபாடதீர் என்ற கட்டளையுடன் தாய்-தந்தையர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று இறைவன் நமக்கு விதிதுள்ள விதிமுறைகளையும், கட்டளைகளையும் பார்போம்.
அல்பகறா அத்தியாயத்தில் வழிப்படுவது இறைவனை மட்டும் தான் என்று எச்சரிககையாக இருப்பதுடன் நற்பண்போடு நடந்து கொள்பவர்களின் வரிசையில் முதல் இடம் பெற்றோர்கள் அதை தொடர்ந்து  உறவினர்கள், அநாதைகள், ஏழைகள் என்று வருகிறது. மனிதர்களிடையே உரையாடல் மற்றும் பேசுதல் போன்றவைகள் ஒழுக்கமிக்க நல்லவைற்றையாக தான் இருக்க வேண்டும் என்றும், முதலில் பெற்றோர்களுக்கு அதன் பிறகே நெருங்கிய உறவினர்களுக்கு, அநாதைகளுக்கு, வறியவர்களுக்கும், வழிப்போக்கர்களுக்கு என்று பட்டியலை இறைவன் அறிவிக்கிறான் இதை போலவே அல் அன்ஆம் அத்தியாயத்தில் இறைவனுக்கு இணை வைக்காதீர்கள் என்ற நிபந்தனைகளுடன்  பெற்றோர்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்  என்று நிபந்தனையாகவே வந்துள்ளது தொடர்ந்து அல் அன் கபூத் அத்தியாயத்திலும் மேற்குறிப்பிட்டபடியே மனிதர்களுக்கு இறைவன் அறிவுறுத்தியுள்ளான்.
குழந்தை பருவம் முதல் வருடக் கணக்கில் இன்றைய நி.லை வரை பிள்ளைகளை அதுவும் எத்தனை பிள்ளைகளாக இருந்தாலும் ஒரு தந்தை கஷ்டப்பட்டு காப்பாற்றி வர முடியும். அந்த தந்தைக்கு எந்தவிதமான பொருளாதார  சு>ழ்நிலைகளில் இருந்தாலும் சரியேஸ்ரீ அதே நேரத்தில் அந்த பிள்ளைகளால் ஒரு தாய்-தந்தையை நல்ல விதமாக உபசரித்து அவர்களை ஒரு நாள் அளவில் கூட சிறந்த மகனாக இருக்க முடியவில்லையே ஏன்? முதியோர்களின் புலம்பல்களுக்கும், அவர்களின் மன வேதனையிலிருந்து என்று விடுதலை? இந்த பெற்றோர்களை போல் பிள்ளைகளும் நாளை முதுமை அடையாமல் இருந்து விடப்போகிறான்? முதுமை என்பது இயற்கையான சமாச்சாரம் என்பது ஏன் இவர்களுக்கு விளங்கவில்லை.
அன்னிஸா என்ற அத்தியாயத்தில் இறைவன் தாய்-தந்தையிடம் நல்ல விதமாக அன்புடன் நடந்து கொள்ளுங்கள் என்று கூறுகிறான் நல்லவிதமாக என்றால் அவர்களுக்கு உணவும், உடை மட்டும் அவர்களின் மனதை திருப்தி அடைய செய்து விடாது. முதுமைக்கு உணவும், உடையும் பெரிதல்ல. அவர்களின் வயிறு மட்டும் நிறைந்து விட்டால் போதும் என்ற எண்ணம் பிள்ளைக்கு துளிக்கூட இருக்க கூடாது மேற்கண்ட அத்தியாத்தில் கூறியது போல் அன்புடன் நடந்து கொள்வது, ஆதரவாக இருப்பதுடன் தான் முதுமை அடைந் தாய்-தந்தையர்களுக்கு மகிழ்ச்சியை தரும்.
தாய்-தந்தை பேணுதல்  சம்பந்தமாக திருக்குர்ஆன் அத்தியாயம் லுக்மான் மற்றும் அல் அஹ்காஃப் கூறப்பட்டுள்ளதை பார்போம்..
லுக்மான் - இந்த அத்தியாயத்தில் அறிஞர் லுக்மான் தம் மகனுக்கு செய்த அறிவுரைகள் எடுத்துவுரைக்கபட்டுள்ளன.  இறைவனுக்கு எதையும் இணையாக்கிவிடாமல் இருப்பதுடன், இறைவனுக்கு செலுத்த வேண்டிய கடமைகளுக்கு அடுத்து அனைத்தையும் விட முக்கியமானதாக தாய்-தந்தைகளுக்கு செலுத்த வேண்டிய கடமைகளே. தாய் நலிவுக்கு மேல் நலிவை ஏற்று அவனைத் தன் வயிற்றில் சுமந்தாள் அவன் பால்குடி மறக்க இரண்டு ஆண்டுகள் பிடித்தன. எனவே இறைவன் கூறகிறான் எனக்கு நன்றி செலுத்துங்கள் உன் பெற்றோர்களுக்கு நன்றி செலுத்துங்கள் என்று வலியுறுத்துகிறான்.
அல் அஹ்காஃப் அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளவை இதோ..தன்னுடைய தாய்-தந்தையிடம் நல்லவிதமாக நடந்து கொள்fள வேண்டுமென்று நாம் மனிதனுக்கு அறிவுறுத்தினோம். அவனுடைய அன்னை அவனை சிரமத்துடனேயே கருவுற்று சுமந்திருந்தாள். சிரமப்பட்டுத் தான் அவனை பெற்று எடுத்தாள். மேலும் அவனைச் சுமந்திருப்பதற்கும், அவனுக்கு பால் குடியை மறக்கடிப்பதற்கும்  முப்பது மாதங்கள் ஆகின்றன. இறுதியில் அவன் தனது முழு பலத்தை அடைந்து அவனுக்கு நாற்பது வயது ஆகும் போது கூறவான் என் அதிபதியே நீ என் மீதும் என் தாய்-தந்தையர் மீதும் பொழிந்த அருட்கொடைகளுக்காக(உனக்கு) நன்றி செலுத்துவதற்காவும், உன் உவப்பைப் பெரும் வகையில் நற்செயலைச்  செய்வதற்காவும் எனக்கு நற்பேற்றினைஅளிப்பாயாக என் பிள்ளைகளையும் நல்லவர்களாக்கி எனக்கு ஆறுதல் அளிப்பாயாக என்று பெற்றோர்களுக்கு பிள்ளைகள்  இறைவனிடம் இறைஞ்சுவார்கள் என்று வழிமுறைகளை இறைவன் கற்றுத் தருகிறான்.
இந்தியாவின் ஏவுகளை தந்தை அப்துல் கலாம் தன் சுய சரிதையை அக்னிசிறகுகள் என்ற பெயரில் வெளியிட்டுள்ளார்.  அதில் தொடக்கத்தின் என் அன்னை என்ற தலைப்பில் தன் தாயின் அன்பும், ஆதரவும் தான் எனக்கு வலிமை தந்தன. அதை கொண்டே நான் இந்த உலகை அச்சமின்றி எதிர் கொண்டேன் என் அன்னையே நாம் மீண்டும் சந்திபோம் அந்த மாபெரும நியாயத் தீர்ப்பு நாளில் என்று கவிதை எழுதியுள்ளார். ஒரு மனிதனுக்கு வளர்ச்சியே அவன் தன் பெற்றோர்கள் மீது வைத்துள்ள அன்பும், மரியாதையும் தான்  உலகமே வியக்கும் அளவிற்கு பேச வழி வருகிறது. இதற்கு சிறந்த உதாரணம் விஞ்ஞானி அப்துல் கலாம்.
முதுமை அடைந்த தாய் தந்தையர்களால் தேவையில்லாத பிரச்சனை வருகின்றன என்று ஒரு சாரார் கூறுவது உண்மை. இன்றைய கால கட்டத்தின் தலைமுறைகளுக்கு இடையே உள்ள மாற்றங்களால் சிறிய பிரச்சனைகள் வருவது உண்மை ஆனால் அதே நேரத்தில் முதியோர்கள் வீட்டில் இருந்தால் பல வகையில் பாதுகாப்பும், உதவியாகவும் இருக்கும். பொருளாதார தேவையை கருத்தில் கொண்டு இன்று பல குடும்பங்களில் கணவன்-மனைவி வேலைக்கு போக வேண்டிய நிலை. இவர்களின் பிள்ளைகளுக்கு வீட்டு பணிப்பெண் தேவையான உணவு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க முடியும் ஆனால் முதியோர்கள் மட்டுமே பிள்ளைகளை கவனத்துடன் பார்fத்து கொள்வதுடன் பேரப்பிள்ளைகளிடம் அன்பை பொழிந்து வருவார்கள் நல்லவிதத்தில் அவர்களுக்கு எதிர்காலத்தில் பயன் தரும் பல அறிவுரைகளை கூறுவார்கள்.
இன்றைய நவீன தகவல் தொழில் நுட்பம் பல வலையில் மக்களுக்கு பயன் தந்தாலும் அதுவே சில இடங்களில் கவுரமிக்க குடும்பங்களை அலைகழிக்க வைத்து விடுகிறது. திறமையாக படிக்கும் பிள்ளை என்று நாம் அவர்கள் கேட்கும் பொருள், வசதிகள் செய்து கொடுக்கின்றோம். அதே நேரத்தில் அவர்களுக்கு ஒழுக்க நெறிகளை கற்று தருவதில்லை. இதன் காரணமாகவே சில குடும்பங்கள் காவல் நிலையத்திற்கும், நீதிமன்றத்திற்கும் கால் வைக்காதர்வர்கள் கூட வைத்து விடுகிறார்கள். சமீபத்தில் திருச்சியில் இண்டர்நெட் காலதர்கள் என்ற தலைப்பில் தினமும் செய்திகள் வருகின்றன. பள்ளி இறுதி  தேர்வு எழுதி வெற்றி பெற்று இருக்கும் தன் மகள் இந்த பட்டப்படிப்பில் சேர்போம்f? அல்லது அதைவிட பயன் தரும் மருத்துவ, பொறியியல் போன்ற படிப்பில் சேர்போமா? என்று கவலையுடன் கனவு கண்டு கொண்டு இருந்த பெற்றோர்களுக்கு இடி விழுந்தது போல் அந்த மாணவி இண்டர்நெட்டில் உள்ள சாட் மூலம் காதல் செய்து பெற்றோர்களுக்ககு தெரியாமல் சிங்கப்பூரில் இருந்து வந்த ஒருவருக்கு மனைவியாகி உள்ளது. இதன் மூலம் நமக்கு விளக்குவது திரைப்படங்களும், தகவல் ஊடகங்களும் பள்ளி மாணவ-மாணவியர்களை வழிக் கேடுக்கிறது. காதல் என்பது தெய்விகமானது என்று சொல்லி மூளை சலவை செய்யும் கதைகள் பெரும் அளவில் வருகின்றன.  இதனால் எத்தனை இளம்பிஞ்சுகள் தங்கள் வாழ்க்கையை தொலைதுள்ளார்கள் என்பதை யாரும் புரிந்து கொள்வதில்லை. இந்த மாயதிரையை பெற்றோர்கள் சிறுவயது முதல் நீக்கி வர வேண்டும். பருவ வயது அடைந்தவர்களுக்கு உடல் மாற்ற நிகழ்வுகளை விளக்குவதுடன், நிதானமாக இருக்க வேண்டிய நிலையை எடுத்து கூற வேண்டும். மேலும் பெற்றோர்கள் மேற்கண்ட சம்பவம் போல நம்மிடையே ஏற்படாமல் இருக்க தன் பிள்ளைகளுக்கு மறைவின்றி ஒழுக்க நெறிகளை கற்று கொடுக்க வேண்டும்.  படிக்கும் நேரத்தில் படிப்பு மட்டுமே குறிக்கோள் என்பதை தெரிவித்து அவர்களுக்கு கல்வியில் மட்டும் ஆர்வத்தை ஊட்டவேண்டும். அத்துடன் பெரியோர்களிடம் எப்படி நடந்த கொள்வது போன்று சிறு விஷயமாக நமக்கு தோற்றினாலும் அதை  பிள்ளைகளுடன் கலந்து உரையாடும் போது அது பெரிதளவில் நாளை பயன் தரக் கூடியது என்ற நம்பிக்கையில் எடுத்து கூற வேண்டும்.
பிள்ளைகளுக்கு நன்நெறிகளை கூற வசதியாக முதியோர்கள் வீட்டில் இருந்தால் பெற்றோர்களின் கண்டிப்புடன்f, பாட்டன்-பாட்டியின் அன்புடன் கூடிய அறிவுரையும் ஒன்று சேர்ந்தால் குழந்தைகள் வழி தவறாமல் போகவும், பிள்ளைகளுக்கு மனதளவில் பக்குவத்தை வளர்க்கவும் முதியோர்கள் பங்கு வீட்டில் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
முதிர்வு அடையும் போது மூளைக்கு செல்லும் இரத்தம் குறைவான அளவில் தான் போகும் மூளை இயக்கத்திற்கு முக்கியாக தேவைப்படும் ஆக்சிஜன் வாயு இயற்கையாகவே போதிய அளவு கிடைப்பதில்லை எனவே முதியோர்கள் தங்களுடைய பொதுவான நடவடிக்கைகள் மந்தமான நிலையாகி விடும். இதன் விளைவாக அவர்களுக்கு ஒரு விதமான தாழ்வு மனப்பான்மை வந்துவிடும். இது போன்ற நேரங்களில் அவர்களுக்கு அன்பு, கனிவு, பாசம், ஆதரவு போன்றவை எந்த அளவு தேவை என்பதை ஒவ்வொரு பிள்ளைகளும் உணர வேண்டும். அத்துடன் இதுபோன்ற மனோத்துவ விபரங்களை தெரிந்து கொள்ளவேண்டும்.
முதுமை அடைந்த பெற்றோர்கள் சில சமயத்தில் அவர்கள் சொல்லுவதும், செயலும் நேர்மாற்றமாகவும், சம்மந்தமில்லாதவையாக இருக்க தோன்றும் இதுபோன்ற நேரங்களில் மகன் அவர்களுக்கு விளக்கத்துடன் எடுத்துக் கூற வேண்டும் ஒரு வேளை புரியவில்லை அல்லது நமது கருத்துக்கு ஒருமித்து வரவிfல்லை என்றால் அதை பெரிதுபடுத்தாமல் மவுனமாக இருந்து விட்டால் அதுவே அவர்கள் உங்கள் கருத்து சார்புடையவர்களாக வருவதற்கு தூண்டுகோலாக அமையும்.
மாதா, பிதா, குரு, தெய்வம் என்று பிள்ளைகளுக்கு நம் பாடத்திட்டங்கள் பாடம் சொல்லி கொடுக்கிறதே தவிர அதன் விளக்கங்களை தெள்ளதெளிவாக பிள்ளைகளுக்கு மனத்தில் பதிவு செய்ய மறந்து விடுகிறது. திருக்குறள் குடும்பம் பேணுவதை கடமையாக சொல்லி வருகிறது. தாயின் காலடியில் தான் சுவர்க்கம் இருக்கிறது எfனறு உலக வாழ்வியில் ஆசான் பெருமானார் நபி(ஸல்) அவர்கள் உலக மக்களுக்கு உன்னதாமாக உரைத்து சென்றுள்ளார்கள். பெற்ற தாய் தந்தையை ஒருபோதும் மறக்க கூடாது என்பது உலக முழுவதும் வலியுறுத்த கூடிய ஒன்று தான்.
பல வருடங்களாக உழைத்து இன்று முதுமை காலங்களில் நம்முடைய பெற்றோர்கள் நம்மை சார்ந்திருக்கும் நேரங்களில் அவர்களின் குண, நலங்களை புரிந்து கொள்ள வேண்டும். காரணம் இத்தனை காலம் அவர்கள் பல முடிவுகள் சுயமாக எடுத்து வந்தவர்களாக இருப்பார்கள் திடீரென்று அவர்களை தவிர்க்க கூடாது, இப்படி ஓரம்காட்டினால் அவர்களை உதாசீனப்படுத்துவது போன்ற எண்ணம் அவர்களுக்கு வரும் எனவே நம்மை இந்த அளவிற்கு உருவாக்கிய தாய்-தந்தையர்களுக்கு நாம் அவர்கள் மெச்சும் அளவிற்கு ஒன்றும் பெரிதாக செய்ய முடியவில்லையே என்று மனதால் வருந்தி அவர்களுக்கு முடிந்தவரை கண்ணியப்படுத்த முயற்சிக்க வேண்டும். இதனால் குடும்பத்தில் சந்தோஷம் காட்டு வெள்ளம் போல் வரும்  பெற்றோர்களும் மகிழ்ச்சி அடைவார்கள் குடும்பத்தில் அன்பு-பாசம்-பற்று என்று அனைத்து விதத்திலும் ஒன்று கூடி வரவேண்டும்.
முதியோர்கள் ஒரு வீட்டில் இருந்தால் தான் அந்த வீடே முழுமை பெரும் என்ற எண்ணத்தில் முதியோர்கள் இல்லங்களை  பூட்டுவோம், ஒழிப்போம். கூடியே வாழ்ந்து ஒவ்வொருவர்களும் பிரிவு என்பதை தவிர்த்து கோடி நன்மைகள் பெற்று வாழ்வோம். முதுமை அடைந்த பெற்றோர்களை முழுமனதுடன் கண்ணிப்படுத்துவோம்.

No comments: