தோப்புத்துறை அ.முஹம்மது நூர்தீன்
பள்ளி இமாம்
தேவை / பள்
மோதினார் தேவை
என்று விளம்பரங்கள்
நம் சமுதாய
/பொது பத்திரிகையில்
அதிகம் வருவதை
பார்த்து இருப்பீர்கள்.
இன்றைய காலத்தில்
பள்ளிவாசலுக்கு மார்க்க
பணியாற்ற வரும்
இமாம்கள் மற்றும்
மோதினார் எண்ணிக்கை
வருடா வருடம்
குறுகிய கொண்டு
தான் போகிறது.
அரபி மார்க்க
போதனை கற்றுக்
கொடுக்கும் மதரஸா
இஸ்லாமிய கல்வி
நிறுவனங்களில் சேர்ந்து
படிக்கும் மாணவர்களின்
எண்ணிக்கை கணிசமாக
குறைந்து வருகிறது
என்பது நடப்பு
உண்மை.
காரணம் இமாம்
மற்றும் மோதினார்
மேலும் பள்ளிவாசல்
பணியாளர்களின் பொருளாதார
வகையில் தரும்
ஊதியம் இன்றைய
காலத்திற்கு ஏற்ற
வகையில் இல்லாத
காரணம் ஆகும்.
இருந்தும் இதை
எல்லாம் கருத்தில்
கொள்ளாமல் இறைவனின்
திருப்பொருத்ததை வேண்டி
இதுபோன்ற மார்க்க
பணியாற்றும் தியாக
மனப்பான்மையில் வரும்
இமாம் போன்றவர்களுக்கு
சமுதாயம் தான்
மொத்த உதவியும்
ஒத்துழைப்பும் அளிக்க
வேண்டும். காரணம்
நம்மை போன்று
இவர்களும் வரும்
காலத்தில் தொழில்
மற்றும் வேலை
வாய்ப்புகள் என்று
வாழ்வியல் சார்ந்த
தேவைக்கான பொருளாதாரா
வாழ்வதாரங்களை தேடி
சென்றால் இத்தனை
கோடி லட்சம்
செலவில் கட்டப்பட்ட
இறை இல்லத்தை
அலங்கரிப்பது யார்?
என்ற கேள்வி
வந்துவிடும்.
எனவே இந்த
புனித மிக்க
ரமலானில் இமாம்
போன்ற பள்ளிவாசல்
உதவியாளர்களை சமுதாயத்திடம்
வாய்விட்டு கேட்கவோ
அல்லது கேட்காமல்
இருக்கவோ செய்யாமல்
பார்த்து கொள்ள
வேண்டிய கடமையும்
பொறுப்பும் நம்
அனைவருக்கும் இருக்கிறது.
என்னை போன்று
வெளிநாட்டில் வாழ்ந்து
வரும் இடங்களில்
பள்ளிவாசல் இமாம்
போன்றவர்களுக்கு நிறைவான
பொருளாதார வசதி
வாய்ப்புகள் மற்றும்
பள்ளி இமாமத்
பணிக்கு பிறகு
சொந்த தொழில்
சார்ந்து செய்வதற்கு
வாய்ப்பு அதிகம்
எனவே அவர்கள்
எந்த வித
குடும்ப கஷ்டங்கள்
அல்லது வசதி
வாய்ப்புகள் பற்றி
யோசிக்காமல் இறைவன்
தந்த வழியில்
இறைப்பணிகளை செம்மையாக
செய்து சமுதாயத்திற்கு
பல வகையில்
பக்கபலமாகவும் இருப்பதுடன்,
இன்மை மற்றும்
மறுமை வாழ்விற்கு
நம்மை எல்லாம்
தகுந்த வகையில்
தயார் செய்து
இறுதியில் இறைவனிடம்
வெற்றியாளர்களாக மாற்ற
பணியாற்றுகிறார்கள்.
எனவே நம்
தமிழகம் முழுவதும்
எத்தனையோ பள்ளிவாசல்களில்
இதுபோன்ற மார்க்க
பணிகளை சிறப்புடன்
செய்து வரும்
இமாம் மற்றும்
பள்ளி பணியாளார்களை
கண்ணியப்படுத்தும் விதமாக
தொடர்ந்து அவர்களின்
தேவைக்கு ஏற்ற
வகையில் பொருளாதாரம்
சார்ந்து நல்ல
ஊதியம் மற்றும்
தேவைகளை செய்து
கொடுக்க பள்ளி
வாசல் நிர்வாகங்கள்
முன்வர வேண்டும்.
பல இடங்களில்
சம்பந்தப்பட்ட நிர்வாகம்
பொறுப்பாகவும் மற்றும்
கவலையுடன் இமாம்களை
கண்ணியப்படுத்தும் நிகழ்வுகள்
நடைபெற்று வருவதை
கண்டு மிக்க
மகிழ்ச்சியாக இருக்கிறது
அதை போலவே
அனைத்து பள்ளிவாசல்
இமாம் மற்றும்
பள்ளிவாசல் பணியாளர்களுக்கு
அதிக அதிகமாக
பொருளாதார உதவி
மற்றும் தேவைக்கு
ஏற்ற உதவி
செய்ய முன்
வர வேண்டும்.
இவர்களை கண்ணியப்படுத்தும்
விதங்களை கண்டு
நாளை அதிக
அளவில் இமாம்களாக
தமிழகம் முழுவதும்
வெளிவர இறைவன்
உதவி செய்ய
வேண்டும்.
புனித மிக்க
இந்த ரமலானில்
தேடி சென்று
இமாம்களை கண்ணியப்படுத்துங்கள்,
நம்மிடை இருக்கும்
குடும்ப உறுப்பினர்
போல் நாம்
ஒவ்வொருவரும் செயல்பட்டால்
நிச்சயம் இதை
பணிகள் சிறப்பாக
இருக்கும்.
பள்ளி மோதினார் பேசுகிறேன்...
.......................................................
மோதினார் தானே என்று
மொத்தமாய் ஒதுக்கி விடாமல்
கொஞ்சம் காது கொடுங்கள்
கெஞ்சிக் கேட்கிறேன்
பத்து வருடங்களுக்கு முன்
பள்ளிமோதினாய்
பதவியேற்றேன் இப்பொழுதுதான் போலுள்ளது இத்தனை வருடங்களும் கடந்துபோனது
இத்தனை வருடங்களுக்குள்
எத்தனை எத்தனை மாற்றங்கள்
பள்ளிவாசலில்
பள்ளி இமாம்கள் பலபேர்மாற,
பள்ளிக் கட்டிடங்களும் மாடிகளாக,
வருமானங்களும் பல்லாயிரமாக,
மாற்றங்கள் ஏராளம் ஏராளம்
மாறாதவைகளுமுண்டு சொல்கிறேன்
மனதில் வைத்துக் கொள்ளுங்கள்
என் மாத சம்பளம்,
என் கந்தலாடைகள்,
இறந்து இத்துப் போன என் சைக்கிள்
ஆறாயிரம் ரூபாய் சம்பளத்துள்
ஐவர் வாழும் துர்ப்பாக்கியம்
என் குடும்பத்துள்
வயிறார உண்ணவும்
வாய்க்கு ருசியாக
ஏதும் வாங்கவும்
பாக்கியமற்றவர் நாங்கள்
மோதினார் தொழிலென்றால்
அத்துனை மோசமா?
மேசனின் நாட்கூலி,
மீனவனின் வாரத்து வருமானம்,
கொத்து ரொட்டிக்காரனின்
ஒரு வேளைக்கூலி,
இத்தனையையும் விட என் பணி
மட்டமா?
நாளுக்கைந்து வேளை அதான் சொல்கிறேன்
நாள் தவறாமல் பள்ளியும் கூட்டுகிறேன்
ஹவ்ள் நிறைய நீரும் நிரப்புகிறேன்
கஷ்ரமென்று ஒருபோதும் நினைத்ததில்லை
கடமைக்கு மேலால் கக்கூசும் கழுவுகிறேன்
வெள்ளிக் கிழமை வந்தால் வேலைகளோ அதிகம்.
மரண வீடென்றால்
மறக்காமல் அழைப்பு வரும்
கல்யாண வீடென்றால் கொஞ்சம் கஷ்ரம்தான், மறதியென்று மன்னித்து விடுவேன்.
மழை, வெயில்
இடி மின்னல்
எதுவும் பார்க்காமல் என் பணியை இனிதே செய்கிறேன் இத்தனை வருடங்களாய்.
மின் குமிழ் எரியாவிட்டால்,
மாபிளை மினுக்க மறந்தால்,
சுற்றும் விசிறி சுழல மறுத்தால்,
சட்டம் மட்டும் பேசுபவர்களே
என் சட்டைப்பையை பார்த்ததுண்டா?
மனைவிக்கு மருந்து வாங்க பணமில்லை
மகளுக்கு மனமுடிக்க வக்கில்லை
நாலுபேருக்கு மத்தியில் நல்ல சட்டை போட நாதியில்லை
இத்தனையையும் நெஞ்சில் சுமந்து
எப்படியய்யா இதமாய் பாங்கு சொல்ல?
இன்னும் ஓரிரு வருடங்களில்
என் பணி முடிகிறது
கையில் எதுவுமற்றவனாய்
எங்கோ ஓர் மூலையில் முகட்டை வெறித்துப் பார்ததபடி கிடப்பேன்
வேதனைகளை மட்டும் சுமந்து
முஅத்தின்களுக்கு சமர்ப்பணம்
No comments:
Post a Comment