இன்றைய காலத்தில்
பல்வேறு பக்கத்திலிருந்து
பல இன்னல்களை
தினசரி சந்தித்து
வரும் நமது
சமுதாயம் மற்றவர்களுக்கு
முன்மாதிரியாக இருக்க
மாaக்கம்
கற்றுக் கொடுத்து
இருக்கிறது.
வரும் மாணவ
சமுதாயம் தனிசுய
பழக்க வழங்கம்
கட்டுபாடு ஒழுக்கம்
இல்லை என்றால்
வருகாலத்தில் முன்னேற்ற
பாதை தேடி
போகாமல் வழிதவறி
போகும் நிலையில்
வாழ்க்கையை கேள்வி
குறியாகி விடும்.
குறிப்பாக பெற்றோர்கள்
தன் பிள்ளைகளை
தனியார் பள்ளியில்
பல்வேறு கஷ்டங்களில்
பெரும் தொகையாக
பள்ளி கட்டணம்
செலுத்தி படிக்க
அனுப்புகிறார்கள்.
இதில் சமுதாய
மாணவர்களின் அயோக்கியதனமான
செயல்களால் பள்ளி
நிர்வாகம் மாணவர்களை
ஒதுக்கி வைக்கும்
நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
குறிப்பாக நமது
சமுதாய மாணவர்களை
பல ஆண்டு
காலமாக நிர்வாக
செய்து வரும்
ஒரு தனியார்
பள்ளி முதல்வர்
என்னிடம் தனிப்பட்ட
முறையில் சொல்லி
ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள்
அதாவது ஒரு
சமுதாய மாணவ,
மாணவியர்கள் 10 வகுப்பில்
நன்றாக கட்டுபாடு
ஒழுக்கத்துடன் படித்த
பள்ளிக்கும், பெற்றோர்களுக்கு
பெருமை வாங்கி
தந்தவர்கள் +1 வகுப்பிற்கு
வந்து தனது
சீறுடை மாற்றி
இருப்பது போல்
தன்னையும் மாற்றிக்
கொண்டு விடுகிறார்கள்
என்றும் இவர்களை
வேறு வகையில்
தான் சரி
செய்ய வேண்டி
இருக்கிறது அத்துடன்
பள்ளி இறுதி
மாற்றுச்சான்றிதழில் நற்சான்று
பகுதியில் நற்சான்று
விரோதமாக குறிப்பிட்டு
கொடுக்க வேண்டி
இருக்கிறது என்று
சொன்னார்கள்.
மேலே கண்ட
பல பள்ளி
உள்பிரச்சனையில் குறிப்பாக
அரசு பள்ளிகளை
விட இதுபோன்ற
பிரச்சனை தனியார்
பள்ளியில் தொடர்ந்து
வருகிறது.
அரசு கல்வி
துறை பொது
தேர்வு முறையில்
இப்போது 10,11 மற்றும் 12 தொடரும் படிப்பு
தேர்விற்கு பல்வேறு
கடினமான உழைப்பும்,
பயிற்சியும் மாணவர்களுக்கு
கொடுக்க வேண்டி
இருக்கிறது.
சில நாட்களுக்கு
முன் பள்ளிகளில்
சார்பில் போய்
மாணவர்கள் தேர்வு
எழுதாமல் ஹால்டிக்கட்
வாங்கி கொண்டு
தனியாக போய்
எழுதும் நிலையில்
தன் ஒழுக்கமற்ற
செயல்களின் காரணமாக
ஒதுக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இவர்களின் வழயில்
எனது நிர்வாக
பள்ளியிலும் முதல்
முறையாக சமுதாய
மாணவர்கள் இந்த
வழியை தானாகவே
பின்பற்றி மற்ற
தனியார் பள்ளி
முன்மாதிரியை எடுத்து
கொண்டு போகிறார்கள்.
சமுதாய பெற்றோர்கள்
பள்ளி கட்டணமே
கட்ட முடியாத
அவல நிலையில்
காலில் விழாத
குறையாக கட்டண
செலுத்தும் காலத்தை
தன் வெட்கத்தை
விட்டு உதவியாக
நீடித்து கேட்டவர்களின்
பிள்ளை இப்படி
செய்யும் போது
கோபத்தைவிட நம்
சமுதாய இளை ய சமுதாயத்தின்
மீது கவலை
கூடவே வருகிறது.
அத்துடன் மாற்றுமத
சகோதரர்களின் பிள்ளைகளும்
நம் சமுதாய
பிள்ளைகளின் வழிகாட்டுதல்
மற்றும் நட்பின்
காரணமாக கெட்டு
போவதை கண்டு
நேரடியாக பள்ளி
நிர்வாகத்திடம் துலக்கபிள்ளைகளால்
தான் எங்கள்
பிள்ளை இப்படி
கட்டுபாடு இல்லாமல்
போய்விட்டார்கள், நீங்கள்
வெளிநாடு போய்
கக்கூஸ் கழுவியாவது
உங்கள் பிள்ளைகளுக்கு
சொத்து சுகம்
சேர்த்து வைத்து
விடுவிங்க ஆனால்
எங்கள் நிலை
அப்படி இல்லை
என்று நம்மை
கைகாட்டும் நிலையை
கண்டு வேதனையாக
இருக்கிறது.
படித்து கொடுக்கும்
ஆசிரியர், ஆசிரியைகளை
அவமானம் செய்வது,
அவர்களின் பொருள்களை
சேதம் செய்வது,
பள்ளி பொருள்களை
நாசம் விளைவிப்பது
என்று கதை
இப்படியே தொடர்கிறது.
பொது தேர்வில்
அதிக மதிப்பெண்
எடுத்து நம்
சமுதாயத்திற்கு கவுரமான
பெயர் பெருமையை
முன்னாள் மாணவ,
மாணவியர்கள் சேர்த்து
கொடுத்ததை இப்போது
இதுபோன்ற மாணவ,மாணவியர்களால் சமுதாயத்தின்
பெயருக்கு அவபெயர்
வருகிறது.
பெற்றோர்கள் நல்ல
கல்வியை கொடுக்க
முற்படுவதுபோல், குடும்ப
நிலை கஷ்ட
நஷ்டங்களை பிள்ளைகளுக்கு
எந்தவிதத்திலும் மறைக்காமல்
சொல்லி கொடுத்து
வளர்க்க வேண்டும்.
சமுதாய பிள்ளைகள்
வெறும் கல்வியாளர்கள்
என்ற தகுதி
மட்டும் இருந்தால்
மட்டும் போதாது
நல்ல ஒழுக்கம்,
பண்பு, கட்டுபாடு,
வாழ்க்கையின் தாக்கம்
முன் பின்
பற்றிய புரிந்துணர்வுடன்
சரியான மனிதநேசமிக்கவர்களாக
வர வேண்டும்.
மிருகங்கள் கட்டுபாடு
இல்லாமல் தெருவில்
திரிவது போல்
இன்று சமுதாய
பிள்ளைகள் திரிவது
மொத்த சமுதாயத்திற்கும்
அவமானம். எதோ
அடுத்த வீட்டு
பிள்ளை என்று
நாம் ஒதுங்கி
போனால் நாளை
நம்மை சார்ந்த
குடும்பத்தின் பிள்ளை
இப்படி போல்
நிலை எப்படி
இருக்கும்.
உலகத்திற்கே ஏகத்துவ
வழியில் மறுமை
வாழ்க்கையை மூலதனமாக
வாழும் சமுதாய
இப்படி திசை
மாறி போவது
மிகவும் வேதனை.
சிந்திப்போர்களுக்கு நல்ல
வழி கிடைத்து
சமுதாயத்திற்கு பெருமை
வாங்க முயற்சி
செய்யலாம். இறைவன்
நாடினால்…
No comments:
Post a Comment