*ஈகை பெருநாள் வாழ்த்துக்கள்*
அமெரிக்காவிலிருந்து
தோப்புத்துறை அபூஜப்பார்-ஜாமிஹ் நூர்தீன்
இந்த வருடம் 2020 வித்தியாசமான நோன்பு மற்றும் தொழுகை என்று கடைபிடித்து இன்று இறுதி தினமான ரமலான் 30ல் நோன்புடன் அஸர் தொழுகையை இமாம் ஜமாத்துடன் தொழுது நிறைவு செய்தோம்.
எனக்கு தெரிந்த மார்க்க அறிஞர் இமாம் அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன் துபாய் இருந்த சமயமத்தில் மார்க்க விளக்க பிரச்சாரத்தின் போது இப்படி படைத்த இறைவனிடம் பிரார்த்தனை செய்ய சொல்லி கற்றுக் கொடுத்தார்கள்.
இந்த புனிதமிக்க ரமலானை மீண்டும் மீண்டும் சந்திக்கும் வாய்ப்பை வல்ல அல்லாஹ் நமக்கு தர வேண்டும் என்று துஆ செய்ய கூறியிருந்தார்கள் காரணம் இறைவன் நம் அனைவருக்கும் மீண்டும் மீண்டும் ரமலானை சந்திக்க வாய்ப்பு கொடுத்தான் என்றால் நம்முடைய ஆயுளை இறைவன் தருகிறான் என்று அர்த்தம் என்பது என் சிந்தனையில் உதித்தது இந்த துஆவை நான் உட்பட அனைத்து குடும்பம் மற்றும் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வேன்.
அந்த வகையில் அனைவருக்கும் மீண்டும் மீண்டும் ரமலானை வல்ல இறைவன் தரட்டும் ஆமீன்.
மேலே குறிப்பிட்ட வித்தியாசமான மார்க்க கடமைகளை பேனுதல் என்பது வீட்டில் கடந்த ஒரு மாதம் இமாம் ஜமாத்துடன் குடும்பமாகவும், எந்த வித தொழுகையும் நேரம் தவறாமலும் விடாமலும் தொழுவதற்கு நல்ல பயிற்சியும் வாய்ப்பாகவும் இருந்தது(இதில் ஒரு அஸர் மட்டும் வெளியில் வாகன வேலைக்காக சென்ற தினம் மட்டும் என்னால் ஜமாத்தாக தொழுக முடியாமல் போனது ஆனால் வீட்டில் மற்றவர்களுக்கு மொத்தமாக கிடைத்து விட்டது). கொரானா தீமையில் ஒரு நன்மையும் இறைவன் வைத்து இருக்கிறான் எனவே இந்த மார்க்க கடமைகளை அதுவும் தொழுகை விசயத்தில் மிகவும் கவனத்துடன் இனிவரும் காலத்தில் தொழுதுவருவதற்கு இந்த ரமலான் பயிற்சியின் விளைவு நம்முடைய ஆயுள் காலம் முழுவதும் தொடர துஆ செய்வோம்.
எனது மூத்த மகன் அப்துல் ஜப்பார் அவர்கள் அனைத்து தொழுகை தரவீஹ் மற்றும் கியாமுல்-லையில் தொழுகை வரை இமாமத் செய்யும் வாய்ப்பை தந்த அல்லாஹ்விற்கு நன்றி. அத்துடன் இந்த ரமலான் இறுதியில் முதன் முறையாக இமாம் ஒருவரின் மேற்பார்வையில் எனது மகன் திருக்குர்ஆனை முழுவதும் நிறைவு செய்துவிட்டார்கள் அதற்கு உதவியாக இருந்த இமாம் ஹாபிழ் குர்ஆன் அம்ஜத் அவர்களுக்கு நன்றியும் துஆவும் செய்து கொள்ள கடமை இருக்கிறது அத்துடன் இமாம் அவர்களை பொருளாதார வகையில் கண்ணியமும் செய்யப்பட்டது இதை இங்கு குறிப்பிட காரணம் நம் அனைவர்களும் இமாம்களை கண்ணியப்படுத்த வேண்டும் என்ற ஊக்கம் கொடுக்கவே. இன்ஷா அல்லாஹ அப்துல் ஜப்பர் ரமலான் விடுமுறை கழித்த பிறகு ஹாபிழ் குர்ஆன் பாடத்திட்டத்தில் இணைந்து இறைவனின் வேதத்தை மனப்பாடம் செய்ய தொடங்க இருக்கிறார்கள் இந்த சிறுபிள்ளையின் ஆசையான ஹாபிழ் குர்ஆன் என்ற தகுதியை விரைவில் பெற முயற்சி செய்வதற்கு வல்ல அல்லாஹ் உதவியாக இருக்க உங்கள் அனைவர்களின் துஆவை வேண்டுகிறோம், ஆமீன்
மீண்டும் ஈகை பெருநாள் வாழ்த்துக்கள் விரைவில் அனைத்து பிரச்சனைகளும் நீங்கி வல்ல இறைவன் இயல்பு வாழ்க்கை தர துஆ செய்கிறோம். ஆமீன்
*அமெரிக்காவிலிருந்து அ.முகம்மது நூர்தீன் மற்றும் அல்நூர் குடும்பத்தினர்கள்*
ஈகை பெருநாள் வாழ்த்துக்கள், தாங்களின் அன்பான வாழ்த்து பிரார்த்தனைக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். அ.முகம்மது நூர்தீன் மற்றும் அல்நூர் குடும்பத்தினர்கள்.
No comments:
Post a Comment