Thursday, December 27, 2007
Wednesday, December 26, 2007
தோப்புத்துறை –சேதுமாதவபுரம் தோப்புத்துறை அ.முகம்மது நூர்தீன் அமைப்பாளர், அமெரிக்கா காயிதெ மில்லத் பேரவை QMF USA
தோப்புத்துறை –சேதுமாதவபுரம்
தோப்புத்துறை அ.முகம்மது நூர்தீன்
அமைப்பாளர், அமெரிக்கா காயிதெ மில்லத் பேரவை
(இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு அங்கீகாரம் பெற்ற அமைப்பு)
தமிழக கிழக்கு கடற்கரையோரத்தில் இருக்கும் ஊர்களில் தோப்புத்துறை சரித்திரம் கொண்ட பசுமை நிறைந்த ஒரு பழைமையான துறைமுக நகரமாகும். பலதரப்பட்ட உள்நாட்டு வணிகம் மற்றும் ஏற்றுமதி, இறக்குமதி வணிபம் பெரிய அளவில் நடைப்பெற்ற தொன்மைமிக்க ஊர், கடலும் அதை சார்ந்த இடமும் இருப்பதால் சங்க கால தமிழர்கள் வழக்கப்படி தோப்புத்துறை நெய்தல் நிலம் என்று வகைப்படுத்தப்பட்டது. தோப்பும் துறைமுகம் சார்ந்த ஊர் தோப்புத்துறை எனவே பன்னாட்டு விமானநிலையம் மற்றும் துறைமுகத்திற்கு வழங்கப்படும் குறியீடு சுருக்க எழுத்து வழங்கப்பட்டுள்ளது என்பது நமக்கு தெரியாத விசயம். தோப்புத்துறை துறைமுக குறியீடு – TPH (INTPH-International Port code)
தோப்புத்துறை தோற்றம் மற்றும் வரலாறு பல நூற்றாண்டு காலத்திற்கு முன் என்று பலரும் நம்புகிறார்கள். தமிழக கடற்கரை ஊர்களாக காரைக்கால், நாகூர், நாகப்பட்டினம், முத்துபேட்டை, அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம், காயல்பட்டினம், கீழக்கரை ஊர்வாசிகள் போன்றே தோப்புத்துறை மக்களும் சத்திய மார்க்கத்தை தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டதுடன், அரபியா மக்களுடன் திருமண பந்த தொடர்பு உறவு முறைகளை கலிபா காலத்திலிருந்து குறிப்பாக கலிபா அபுபக்கர் (ரலி) அவர்கள் காலத்திலிருந்து இருந்ததாக நம்பிக்கை செய்தியாகும். நம்பிக்கைகள் சில நேரத்தில் உலக அளவில் சரியாக இருக்கலாம் அல்லது சந்தேகத்துடன் வலம் வருவது இயற்கையான விசயம் தான். இந்த காலத்தில் தான் நம் ஊர்களில் இறைநேசர்களாக கடல் மார்க்கமாக வந்தவர்கள் இஸ்லாமிய நெறிகளை போதித்து மக்களை ஏகத்துவநெறியின் பக்கம் அழைத்து அதன் படி தங்கள் வாழ்க்கை அமைத்து கொடுத்தார்கள், அத்துடன் மக்களுடன் கலந்து இறைபோதனையும் மார்க்க நெறிகளையும் வாழ்ந்து காட்டி தங்கள் வாழ்க்கை இறுதி நாள் வரைஇங்கே இருந்துள்ளார்கள்.
விஜய ரகுநாத சோக்கலிங்கர் ஆட்சி காலத்தில் நம் பகுதி அவர்களின் ஆட்சியின் கீழ் செயல்பட்ட காரணத்தால் வேதாரண்யம்-திருமறைகாடு சுற்றியுள்ள பல சாலைகளுக்கும், ஊர்களுக்கும், வழிபாடு தளங்களுக்கும் அவர்கள் ஆட்சிபகுதியில் இருந்த சமுத்திரத்திற்கு சேது என்ற பெயர் சேர்த்து அழைக்கப்பட்டது. தோப்புத்துறைக்கு சேதுமாதவபுரம் என்ற பெயரும் இருந்தாக சொல்லப்படுகிறது.
தோப்புத்துறை பகுதியும் சாலை மற்றும் வீதிகளின் அமைப்பு
தமிழ்நாடு தலைநகர் சென்னை மாநகத்திலிருந்து 365 கீ.மீ தூரத்தில் கிழக்கு கடற்கரை பகுதியில் இருக்கும் ஊர். தோப்புத்துறை 20 கீ.மீ கீழ் பகுதியில் Point calimere என்று அழைக்கப்படும் கோடிக்கரை/காடு உள்ளது. அக்கரைபள்ளி என்று சொல்லப்படும் கடல் பகுதியிலிருந்து தொடங்கும் அடப்பாறு தோப்புத்துறை வழியாக பல ஊர்களை கடந்து நாகப்பட்டினம் வரை ஓடுகிறது. ஒரு காலத்தில் இந்த ஆறுவழியாக தான் விளைநிலங்களில் சாகுபடி செய்து நெல் மற்றும் தானியங்களை தோனி என்று சொல்லப்படும் பாய்மரசிறுபடகுகள் மூலம் கொண்டு வந்துள்ளார்கள். இந்த ஆறுவழியாக தான் மரகலங்களை செலுத்தி கடல்முகத்துவரத்து சென்று கடல்வழியாக பல்வேறு நாடுகளுக்கு சென்று வணிகம் செய்துள்ளார்கள். தோப்புத்துறை சாலைகள், தெருகள் பல்நோக்கு பார்வையில், வரும்முன் காக்கும் யோசனையுடன் அமைக்கப்பட்டுள்ளது இன்று நம்மவர்களுக்கு ஆச்சிரியமான விசயம் தோப்புத்துறை ஊர் அமைப்பு ஆகும், ஒரு தேர்ச்சி பெற்ற வல்லு\நர் மூலம் திட்டமிட்டு அமைத்து போல் இருக்கும். வேதாரண்யம்-நாகப்பட்டினம் பிரதான சாலை தொடங்கி ஒவ்வொரு தெரு முடிவும் அடப்பாறு சொல்லப்படும் ஆறு வரை சென்று அடையும். மழை காலங்களில் மழைநீர் அந்தந்த சாலை தெருவழியாக அடப்பாறு சென்று கலக்கும் இதனால் ஊரில் எந்த பகுதியிலும் தண்ணீர் தேங்கி இருக்கும் நிலை இருக்காது. தெருகளின் அலகம் வசதியான வகையில் அமைக்கப்பட்டுள்ளது அத்துடன் ஊரின் மத்திய பகுதியில் பல நூற்றாண்டுகளுக்கு முன் அரபிய கட்டிட கலை அமைப்பில் 5 மண்டபம் கொண்ட ஜாமிaய பெரிய பள்ளி மற்றும் அடக்கஸ்தலமும் ஊர் தெருகளின் மட்டத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட உயரம் உயர்த்தி நிறுவப்பட்டு உள்ளது. இந்த பள்ளியை மாற்றி இன்றைய மற்றும் எதிர்கால தேவைக்கு ஏற்றவாறு தற்போது நவீன அரபு கட்டிட கலையில் வடிவமைப்பில் புதிய ஜாமியா பள்ளி பலத்தரப்பட்ட கொடையாளர்களின் பங்களிப்பின் மூலம் கட்டி முடிக்கப்பட்டு இன்றைய தினம் இறைஇல்லத்தை ஊர் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படுகிறது என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறோம்.
தோப்புத்துறை பெயரில் கப்பல் பதிவு
சிங்கப்பூர் மையமாக செயல்படும் கப்பல் பெயர் தோப்புத்துறை என்று பதிவு பெற்றுள்ள ஆவணம் இங்கிலாந்து கப்பல் பதிவேடுகளில் வெளியிடப்பட்டுள்ளது.
1911 –ல் இஸ்லாமிய கல்வியாளர் வரிசையில் தோப்புத்துறை மைந்தன்.
வேதம் வழங்கப்பட்ட கிருஸ்த்துவர்களால் குறைகூறப்பட்ட மறுமை வாழ்வை பற்றி தௌiவாக இஸ்லாமிய கண்ணோட்டத்தில் பதில் கூறும் விதமாக புத்தகம் ஒன்று தோப்புத்துறை இஸ்லாமிய கல்வியாளர் மரியாதைக்குரிய முத்து மரைக்காயர் என்பவரால் எழுதப்பட்டு 1911 –ல் அச்சு பதிப்பை வெளிட்டுள்ளார்கள். இதன் மூலம் தமிழக இஸ்லாமிய அடையாள பிரதிபலிப்பு மற்றும் அச்சு பதிப்பு கலாச்சாரம் பங்களிப்பை அவர்கள் கொடுத்து தோப்புத்துறைக்கு பெருமை சேர்த்துள்ளார்கள்.

வேதாரண்யம்/கோடியக்கரை(பாயிண்ட்காலிமர்) பகுதிக்கு துறைமுகம் தோப்புத்துறை மட்டுமே.
இந்திய துறைமுக சட்டம் 1908 படி வேதாரண்யம் துறைமுகமாக செயல்படவில்லை. அப்போதைய அரசு அனுமதிக்கப்பட்ட கப்பல் போக்குவரத்து துறைமுகம் தோப்புத்துறை மட்டும் வேதாரண்யம் சுற்றியுள்ள பகுதிக்கு என்று திறக்கப்பட்டது. தோப்புத்துறை பகுதியில் தத்தர்கள் மற்றும் மரக்கல ஆயர்கள் வாழ்ந்த பூமியாகும். மரக்கல ஆயர்கள் கடல் வணிபம் மூலம் கொண்டு வரும் பொருள்களை தத்தர்கள் குதிரை மூலம் தரைவழியாக அனைத்து ஊர்களுக்கும் செய்து வியாபாரம் செய்தார்கள். இன்று கிட்டங்கி தெரு என்று பெயர் மறுவி அழைக்கப்படும் லெப்பை அப்பா பள்ளி அருகில் அமைத்துள்ள பண்டகச்சாலையில் ஏற்றுமதி மற்றம் இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களுக்கான கிடங்குகளாக பயன்படுத்தப்பட்டன. இன்று துறைமுக செயல்பாடுகள் இல்லை என்றாலும் கடலோர சுங்கத்துறை அலுவலகம் முழுநேரமாக செயல்படுகிறது.
விசாகப்பட்டினம்/தோப்புத்துறை துறைமுகம்
1949-50 வருடங்களில் இந்த இரண்டு துறைமுகத்திலும் நடந்த கப்பல் வர்த்தகம் 6.87 லட்ச டன் மேல் தாண்டியதாக அரசு ஆவணங்களில் பதிப்பட்டுள்ளது.
கல்வி பணியில் தனிப்பங்களிப்பு தோப்புத்துறை சிங்கப்பூர் முஸ்லிம் சங்கம்
தமிழ் முஸ்லிம்கள்f கல்வியில் சிறந்து விளங்கினார்கள். இவர்கள் தொழில் மற்றும் நிறுவன அதிபர்களாக இருந்து சிங்கப்பூர் பொருளாதார வளர்ச்சியுடன் இந்தியா தமிழக பொருளாதார மேம்பாட்டிற்கு பெரும் பகுதியை கொடுத்துள்ளார்கள். கடையநல்லூர் முஸ்லிம் லீக் மற்றும் தோப்புத்துறை முஸ்லிம் சங்கம் போன்றவைகள் மற்றவர்கள் பார்த்து பெருமை கொள்ளும் அளவிற்கு இந்த சங்கத்தின் பங்களிப்பு சமூகம், மதம் மற்றும் கல்வி தேவைகளுக்கு பெரும் உதவி புரிந்துள்ளார்கள். தோப்புத்துறை சங்கத்தில் செயல்பாடுகள் அரசு பதிவேட்டில் பதியப்பட்டு பெருமை கொள்ளும் அளவில் சங்கத்தின் செயல்பாடுகள் பற்றி குறிப்பு எழுதப்பட்டுள்ளது. சிங்கப்பூர் சங்கம் தான் தோப்புத்துறை வளர்ச்சியில் முதல் வழிக்காட்டியாகும்.
முதல் நூலகம்
தோப்புத்துறையில் இக்பால் நூலகம் ஹஜ்ரத் சேகு அப்துல் காதிர் வலி தர்ஹா மற்றும் ஆரிபின் பள்ளிவாசல் பரிபாலன சங்கம் நிர்வாகத்தின் மூலம் தொடங்கி புத்தகம் படிக்கும் ஆவலை தோப்புத்துறை மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள். ஊரில் இருக்கும் சங்கங்களில் இது மிகவும் பழைமையானது. வருடந்தோரும் வரவு செலவு கணக்குகள் பார்வையில் தவறாமல் வைக்கும் சங்கம் என்ற பெருமையும் உண்டு.
தோப்புத்துறை துறைமுகத்தில் சுங்கவரி வசூல்
பொதுவாக 20 முதல் 30 சதவீதம் வரை சுங்கவரி ஏற்றுமதி மற்றம் இறக்குமதி பொருகளுக்கு வரி விதிக்கப்பட்டு இந்த வரி வருமானத்தில் ஒரு பகுதியை நவவித்திலாயா பள்ளியில் பணிபுரிபவர்களுக்கு சம்பளம் கொடுக்கப்பட்டது.
தமிழகத்தில் உள்ள முக்கிய துறைமுகம்
1938 இந்தியன் புவியியில்துறை சஞ்கையில் தமிழகத்தில் உள்ள முக்கிய துறைமுக பட்டியில் வெளியிட்ட பதிவில் தோப்புத்துறை துறைமுகம் இடம் பெற்றுள்ளது.
தமிழ் பணியில் தோப்புத்துறை வாசிகள்
சிங்கப்பூரில் வெளிவரும் நாளிதழ் தமிழ் மலர் மற்றும் திராவிட முன்னேற்ற கழகம், தமிழ் கல்வி கூட்டமைப்பு, சிங்கப்பூர் தமிழ் இளைஞர் மன்றம், தமிழ் நூலகம் மற்றும் சங்கங்கள் அனைத்திலும் தோப்புத்துறை சார்ந்தவர்களின் பங்களிப்பு இருந்துள்ளது. மக்கள் தொகை சரிபார்க்கும் ஆவண பதிவில் எது குறிப்பிடப்பட்டுள்ளது.
சுதந்திர போரட்டத்தில் முக்கிய நிகழ்வு உப்பு சத்தியா கிரகம்
1930 ஏப்ரல் 13 தேதியில் இராஜாஜி தலைமையில் ஆங்கில அரசுக்கு எதிராக நடைப்பெற்ற உப்பு சத்தியா கிரகம் நிகழ்வுகளில் தோப்புத்துறை ஜமாத் பெரிய உதவிகளை செய்துள்ளது. உப்பு சத்தியா கிரகத்தில் பங்கு கொள்ள வந்த முகம்மது இஸ்மாயில் தலைமையில் மதுரையிலிருந்து 30 மேற்பட்ட தொண்டருடன் வந்தவர்கள் இவர்கள் தோப்புத்துறை பள்ளிவாசல் மற்றும் தர்ஹா வாளாகத்தில் தங்க வைத்தார்கள். இதை அறிந்த ஆங்கில அரசு காவல் துறை இவர்களை சிறைப்பிடிக்க வந்த போது இது புனிதமிக்க வழிப்பாடுதளம் இங்கு தங்கிருப்பவர்களை கைது செய்ய கூடாது எதுவாக இருந்தாலும் நாளை பகல் நேரத்தில் வாருங்கள் என்று திருப்பி அனுப்பி விட்டார்கள். தடையை மீறி அவர்களுக்கு உணவு மற்றும் வசதிகளை தோப்புத்துறை ஜமாத் மக்கள் செய்து கொடுத்தார்கள். பள்ளிவாசலில் தங்கியவர்கள் காலை 3 மணிக்கு அகஸ்தியன்பள்ளிக்கு சென்று உப்பு சத்தியா கிரகத்தில் பங்கு பெற்றார்கள்.
தோப்புத்துறை ஜமாத் மக்கள் செய்த இந்த பெருமை கொள்ளும் உதவி பற்றி அரசு ஆவணங்களில் காணமுடிகிறது.
சர்தார் வேதரத்தினம்பிள்ளை குருகுலம் பெண்கள் கல்விக்கு கலங்கரை விளக்கம்.
வேதாரண்யம் பகுதியில் உப்பு சத்தியா கிரக தியாகி சர்தார் வேதரத்தினம்பிள்ளை அவர்களால் தொடங்கப்பட்ட குருகுலம் வேதாரண்யம் சுற்றி இருக்கும் பெண்களின் கல்விக்கு திருப்புமுனையாக இந்த கல்வி நிறுவனம் செயல்படுகிறது. குறிப்பாக தோப்புத்துறை முஸ்லிம் பெண்கள் தொடக்க கல்வி மட்டுமே பெற்று வந்த காலம் மாற்றம் பெற்று என்று அறிவியல் கலை பட்டதாரிகளாகவும், டாக்டர் மற்றும் பொறியாளர் என்று ஒரு தன்னிரைவு அடைய இந்த குருகுலத்தின் பங்கு மேன்மையானது.
தோப்புத்துறை முஸ்லிம் சங்கம் துபாய்
ஊரின் பல்வேறு நலத்திட்டங்களை துபாய் வாழ் தோப்புத்துறைவாசிகள் சங்கம் மூலம் செய்து வருகிறார்கள். குறிப்பாக மார்க்க கல்வி கருத்தில் கொண்டு பெண்கள் அரபி கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது.
சமய நல்லிணகத்திற்கு ஓர் எடுத்துகாட்டான ஊர்
தோப்புத்துறை மற்றும் அதை சுற்றி உள்ள ஊர்களில் இருக்கும் மாற்று மத சகோதரர்களுடன் பல நூற்றாண்டுகளாக உறவு முறை கூறி அழைத்து பழகி நட்பு பாராட்டும் நிலை இன்றும் தொடர்கிறது. அனைத்துவித வைபவங்கள், விழாகள், திருமண நிகழ்வுகளில் ஒற்றுமையுடன் பங்கு கொண்டு வருகிறார்கள்.
இன்றைய தோப்புத்துறைவாசிகள்..
கடந்த 10 வருடங்களில் கல்வியில் மேம்பட்டவர்களாக உருவாகி பல்வேறு பணி மற்றும் தொழில் அலுவல் காரணமாக உள்நாடு மற்றும் வெளிநாடு சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, வளைகுடா நாடுகள் மற்றும் பல்வேறு நாடுகளில் குடும்பமாகவும், தனியாகவும் வசித்து வருகிறார்கள். தொழில் என்று ஒரு சிலரே செய்கிறார்கள்.
தோப்புத்துறை கல்வி
விழிப்புணர்வு இயக்கம்
Thopputhurai Educational Awareness Movement(TEAM)
இறைவன் திருப்பெயரால்…
நான் அமீரகத்தில்
இருந்த போது
ஈமான் கல்விக்குழு
செயலாளராக மிகுந்த
ஈடுபாடுமிக்க கல்விசேவையில்
பல்வேறு களப்பணிகளை
செய்து தமிழக
முழுவதும் ஏழை,
எளிய சமுதாய
மாணவ,மாணவியர்களை
பட்டதாரிகளாக இறைவன்
உதவியால் உருவாக்கிய
குழுவில் பிரதான
பொறுப்பில் இருந்து
செயல்பட்டது மிகவும்
சந்தோசமான நிகழ்வுகள்.
கல்fவி
தான் ஒரு
சமுதாய விடியலுக்கு
மூலதனம் என்ற
அடிப்படையில் என்ன
தான் மற்ற
சமுதாய மக்களுக்கு
பல்வேறு உதவிகளை
செய்தாலும் நம்முடைய
சொந்த ஊர்
வருகால இளைய
சமுதாயத்திற்கு ஏதோ
வகையில் கல்வி
சேவை வழங்க
வேண்டும் என்ற
உய்fர்வான
எண்ணத்தில் ஈமானில்
என்னுடன் நிர்வாக
பொறுப்பில் இருந்த
இராஜகிரி தாவுது
பாட்சா அவர்கள்
கல்லு\ரியும்,
நான் நம்ம
ஊரில் ஆங்கில
பள்ளிக்கூடமும் சமகாலத்தில்
தொடங்கினோம்.
இதே நேரத்தில்
துபாய் தோப்புத்துறை
முஸ்லிம் சங்கத்தில்
பல பொறுப்புகளில்
ஏறக்குறைய தலைவர்
பதவியை தவிர
அனைத்து பொறுப்புகளில்
இருந்து நம்ம
சொந்த ஊர்
வளர்ச்சிக்கு பல்வேறு
திட்டங்களை குறிப்பாக
அரபி பெண்கள்
நிஸ்வான், பொது
நூலக என்று
அறிமுகம் செய்து
அதற்கான பொதுக்குழுவில்
பல காலங்களில்
அவசியங்களை மனுவாக
கொடுத்து அதை
நடைமுறையில் நம்மவர்களின்
ஒத்துழைப்புடன் செய்துத
வந்தேன். அந்த
வகையில் தோப்புத்துறை
முஸ்லிம் சங்கத்தின்
பொறுப்புகளில் இருந்து
கற்றுக் கொண்ட
பல நிர்வாக
திறமைகளை தமிழக
ஒருங்கிணைந்த ஜமாத்தார்களை
கொண்டு முழு
தமிழக அமைப்பான
ஈமானில் இணைந்து
செயல்பட்டு நம்
சமுதாயத்திற்கும், நம்
ஊருக்கு பெருமை
சேர்த்தேன். கல்விக்குழுவில்
இருந்த போது
நம்ம ஊரில்
தேவை உள்ளவர்களை
இனம் கண்டு
அவர்களுக்கு மேற்படிப்பிற்கு
ஈமான் கல்வி
உதவித்தொகை கிடைத்து
பிடித்து பயன்பெற
செய்தேன். அத்துடன்
ஈமான் நிகழ்வுகளில்
நம்ம ஊரில்
மார்க்க சேவையாற்றி
இமாம் அவர்களை
சிறப்பு அழைப்பாளராக
வர செய்து
கண்ணியப்படுத்தினேன். எத்தனையோ
பொது நல
சேவை மற்றும்
ஊரின் வளர்ச்சியில்
நேரடியாகவும், முறைமுகமாக
களப்பணியாற்றி வந்து
இறைவனின் திருப்பொறுத்தை
நிரம்ப பெற்றேன்.
இருஉலகத்திற்கு தேவையான
கல்வியை நம்ம
ஊர் மக்கள்
ஆண், பெண்
என்று பாகுபாடு
இல்லாமல் பெற
பல வகையில்
பெற வேண்டும்.
பலவேறு பொது
போட்டி தேர்வுகளில்
பங்கு கொண்டு
அரசு பணிகளில்
நம்முAடுய
சமுதாயம் ஒரு
அங்கீகாரம் பெற
வேண்டும் என்ற
வகையில் எனது
சொந்த பொருளாதார
செலவில் தோப்fபுத்துறை கல்வி விழிப்புணர்வு
இயக்கம் ஒன்று
துபாய் தஞ்சாவு>ர் உணவகத்தில் துவங்கி
ஆரம்ப கட்டமாக
ஈமான் கல்விக்குழு
கல்வி உதவித்தொகையில்
படித்த நமது
ஊர் பிள்ளைகளின்
கல்வி நிறுவன
கட்டணம் ஈமாம்
கொடுத்தும், இதர
செலவுகளை ஏற்றுக்
கொண்டோம். இப்படி
ஒன்று, இரண்டு
என்று தொடங்கி
கல்வி உதவி
இடையில் நான்
பணிநிமித்தமாக அமெரிfக்கா போக வேண்டிய
நிலை என்ற
காரணத்தால் நமது
ஊர் தோப்புத்துறை
முஸ்லிம் சங்கத்தின்
ஒரு கல்வி
குழு அங்கமாக
இந்த தோப்fபுததுறை கல்வி விழிப்புணர்வு
இயக்கதை இணைத்து
அனைத்து ஆணவங்கள்
மற்றும் கடித
புத்தகம், கல்வி
சந்தா ரசீது
புத்தம் வரை
ஒப்படைந்து வந்து
விட்டேன். ஆனால்
பல்வேறு காரணத்தால்
துபாய் சங்கத்தின்
பணிசுமையின் தாக்கதால்
மேற்கொண்டு அடுத்த
கட்ட நிலைக்கு
எடுத்து செல்லாமல்
விட்டு விட்டார்கள்.
இந்த இயக்கத்தின்
நோக்கம் நம்
ஊர் இளைய
சமுதாயம் கல்வியில்
மேன்பட விழிப்புணர்வு
செய்யவும். எந்த
வித கல்வி
கற்றலில் இடைநிறுத்தம்
அல்லது தேர்வில்
தேர்ச்சி பெறாமல்
பின்னடைவு பெறும்
மாணவர்களுக்கு அவர்களுக்கு
ஏற்ற வகையில்
தனியாக அதவும்
அவர்களின் மனநிலைக்கு
ஏற்றவாறு ஆலோசனை
மற்றும் கலந்துரையாடல்
செய்து அவர்களை
அடுத்த தேர்விற்கு
தயார்படுத்த உதவி
செய்வது மேலும்
அனைத்து அரசு
வேலை வாய்ப்புகளில்
நமதூர் இளைய
சமுதாயத்தை பங்கு
பெற வழிவகை
செய்ய வேண்டும்.
அத்துடன் அவர்களின்
சந்தேக மற்றும்
கேள்விகளுக்கு சரியான
நேரத்தில் அவர்களுக்கு
துணையாக இருந்து
அவர்களின் வாழ்க்கை
முன்னேற்றத்திற்கு அனுபவசாளிகளை
கொண்டு தனிப்பயிற்சி
மற்றும் ஆலோசனை
கொடுத்து அவர்களை
ஊக்கப்படுத்தி, அவர்களை
வெற்றியின் பாதையில்
செலுத்தி இலக்கை
அடைய இறைவன்
உதவியால் களப்பணியாற்ற
வேண்fடும்
எனபதே.
நம் பிள்ளைகள்
துவக்க கல்வி
முதல் பள்ளி
இறுதி தேர்வு
வரை அதிகபட்சம்
ஆங்கில பள்ளியில்
படித்தாலும் போட்டி
தேர்வுகளில் எந்த
வித அடிப்படைய
அறிவாற்றல் இல்லாத
நிலையில் அவர்கள்
மேற்படிப்பு படித்து
வெளிவந்தாலும் அவர்களால்
போட்டி தேர்வு
மற்றும் வேலைவாய்ப்புகளுக்கான
நேர்முக தேர்வில்
தன்னையும், தன்
திறமையும் பிரதிபலிக்க
முடிவதில்லை. அத்துடன்
சுயதிறமையை விளக்கி
சொல்ல மொழி
மற்றும் சுயதிறமையை
வெளிகாட்ட முடியாமல்
கஷ்டப்படுவதை நாம்
தினசரி கண்டு
வருகிறோம். அத்துடன்
அவர்களின் மொழி
திறன் மேலும்
அந்த மொழி
சார்ந்த பேச்சு
உரையாடல் திறன்
இல்லாத காரணத்தால்
தன்னை யார்?
என்று நிறுபிக்க
முடியாத நிலைக்கு
தள்ளப்படுகிறார்கள் எனவே
பல்வேறு சுயதிறன்கள்
இருந்தாலும் நேர்முக
தேர்வின் போது
விளக்கி சொல்ல
முடியாத நிலையில்
வாய்ப்புளை இழந்து
விடுகிறார்கள்.
மேலே குறிப்fபிட்ட அனைத்து பிரச்சனைகளையும் ஒளிவு
மறைவு இல்லாமல்
இளைய சமுதாயத்திற்கு
ஒரு கலங்கரை
விளக்கமாக இருந்து
செயல்படுவதே இந்த
தோப்புத்துறை கல்வி
விழிப்புணர்வு இயக்கத்தின்
பிரதான நோக்கம்.
அத்துடன் ஆங்கில
கல்வி கற்றவர்கள்
கூட அவர்கள்
அதிக சதவீதம்
மேற்படிப்பு படிக்கும்
கல்வி நிறுவனங்களில்
வருடாந்திர பல்கலைகழக
தேர்வு நன்கு
படித்து தேர்ச்சி
பெறுவதில்லை. கல்வி
நிறுவனத்தில் படிப்பு
காலம் முடிந்தாலும்
இதுபோன்று பல்கலைகழக
தேர்வில் தேர்ச்சி
பெறாமல் இருப்பதால்
அவர்களின் இறுதி
பட்டமோ அல்லது
பட்டயமோ வாங்க
முடியவில்லை. தேர்வுகளை
நிலுவையில் வைத்தவர்களாக
பட்டம் வாங்க
முடியாதவர்களாக இருக்கிறார்கள்.
எனவே இந்த
நிலையை மாற்ற
அவர்களுக்கு இந்த
கல்வி விழிப்புணர்வு
இயக்கம் மூலம்
நல்ல அறிவுரை
மற்றும் வழிகாட்டுதலை
செய்து எதிர்காலத்தில்
வெற்றியாளர்களாக வலம்
வர உதவி
செய்ய வேண்டும்.
விடியும் என்று
விண்ணை நம்புவதை
விட முடியும்
என்று உன்னை
நம்பி செயல்பட
வேண்டும் என்ற
என்னுடைய முழக்கத்துடன்
சமுதாய இளைய
சந்ததியனர்களை வழிகாட்ட
வேண்டும் என்பதே
என்னுடைய ஆசை.
இதுபோன்ற எண்ணத்தில்
இருக்கும் அனைவர்களும்
இந்த கல்வி
விழிப்புணர்வு இயக்கத்தில்
தன்னை தன்னார்வ
அடிப்படையில் இறைவனின்
திருப்பொறுத்ததை வேண்டி
இணைத்து கொள்ள
இந்த மடல்
மூலம் கேட்டுக்
கொள்கிறேன். என்ன
தான் ஊர்
விட்டு வெளிநாட்டில்
இருந்தாலும் நம்முடைய
சொந்த சமுதாய
பல்வேறு தளங்களில்
படித்து அங்கீகாரம்
பெற வேண்டும்
என்ற ஆதங்கமும்,
ஆசையும் குறைவில்லை.
இறைவன் உதவியால்
முயற்சி செய்வோம்.
இந்த கடிதம்
2005 வருடத்தில் அமெரிfக்காவில் நான் வசிக்கும்
பிரிமோன்ட் என்ற
நகரத்தில்iருந்து
எழுதியது இருந்தும்
இன்னும் எத்தனை
நாட்கள் ஏன்
எத்தனை வருடங்கள்
சென்றாலும் என்னுடைய
ஆசையை யாரோ
ஒரு இளைஞர்
தன் முனைப்புடன்
தன் சுற்று
நட்புடன் நான்
கண்ட கனவை
செயல்வடிவம் கொடுக்க
வாய்ப்புள்ளது. எதுவும்
முடியாது என்று
இல்லை இறைவன்
நாட்டம் இருந்தால்
நடக்கும் இப்போது
ஊக்கமும் ஆக்கமும்
கொடுத்து வழிமுறையை
சொல்லி கொடுப்போம்.
ஏன் இதுபோன்று
எழுதி கூட
வைப்போம் நாளை
ஒருவர் படித்து
இதை நடைமுறை
படித்தால் அதன்
மூலம் எனக்கு
துஆ கிடைத்தால்
அற்தகு ஈடு
வேறு எதுவும்
இல்லை. முயற்சி
தொடர்ந்து செய்வோம்.
கல்வி என்பது
வேறு பட்டம்
வாங்கி வீட்டில்
வைத்து இருப்பதற்கு
அல்ல. நமக்கும்
நம் சமுதாயத்திற்கும்,
நாட்டிற்கும் அது
உதவ வேண்டும்.
இளைஞர்களே இறைவன்
நாடினால் முயற்சி
செய்வோம். வெற்றி
நிச்சயம் அதற்கு
வல்ல இறைவன்
உதவி செய்வான்
ஆமீன்.
///தக்கர் பச்சான் தனது ஒன்பது ரூபாய் நோட்டு திரைப்படத்தில் தெளிவு படுத்தயுளார்
மணிரத்தினம், அர்ஜுன் போன்றவர்கள் இயக்கி நடித்த படத்தில் முஸ்லீம் என்றால் திவிரவாதி என்று காட்டுவார்கள், தக்கர் பச்சான் துணிவுடன் அவர் வாழ்த்த உண்மையை வெளிபடுத்தி இருக்கிறார்.///
தோப்புத்துறை அரசு நடுநிலை பள்ளியில் இருந்து அரசு உயர்நிலைப் பள்ளியாக மாற்றம் அடைந்த வரலாறு குறிப்புகள்.
1. கல்வியாண்டு 2004-2005 அரையாண்டு தேர்வுக்கு பிறகு அரசு உயர்நிலை பள்ளி அங்கீகாரம் வந்தது.
2. இந்த அங்கீகாரம் வாங்க தோப்புத்துறை பெரியவர் ரெஜாக் ஷா அவர்கள் முழு முயற்சியில் அவர் கோரிக்கையின் அடிப்படையில் தோப்புத்துறை துபாய் முஸ்லிம் சங்கம் வைப்பு தொகை 10000 வாங்கி கட்டப்பட்டது.
4. நான் வழக்கமாக வேதாரண்யம் அரசு உயர்நிலை பள்ளியில் இருக்கும் நூலகத்திற்கு மதிய உணவு இடைவேளையில் படிக்க செல்லும் வழக்கம் அதற்கு பக்கத்தில் இருக்கும் விளையாட்டு ஆசிரியர் ஓய்வு அறையில் இருந்த அப்போதைய நம்ம ஊர் பிடி சார் இராமகிருஷ்னன் என்ற நினைக்கிறேன் (அவருடைய பையன் எனக்கு சீனியர்) அவர்கள் என்னை அழைத்து பாய் நம்ம ஊருக்கு உயர்நிலை பள்ளி வந்து விட்டது உன் பெயரை எழுதி, உன் நண்பர்களையும், நம்ம ஊர் மற்றும் பக்கத்து ஊர் பசங்களை அழைத்து வா என்றார்கள். அதன் அடிப்படையில் சுமார் 35 முதல் 40 மாணவர்களை எனது பொறுப்பில் அழைத்து போய் சாரிடம் பதிவு செய்து கொடுத்து மொத்த டிசியும் என்னிடம் தான் கொடுத்து அனுப்பினார்கள். நான் தான் அப்போதைய வகுப்பு லீடர் 9 மற்றும் 10.
5. நான் படித்தது 6-8 வரை இந்த பள்ளியில் தான், கடைசியாக 8 வது பொது தேர்வு குருகுலத்தில் எழுதிய செட் எங்களுடையது தான்.
6. கல்வியாண்டு 2004-2005 பாதி வரை படித்து விட்டு தோப்புத்துறை க்கு வந்து விட்டோம்.
7. 9/10 வகுப்பில் சேர்ந்த எங்களுக்கு யாரும் ஆசிரியர்கள் கிடையாது. ஒரே ஒரு தலைமை ஆசிரியர் முசிரி இருந்து வந்து ஆங்கிலம் சிறிது காலம் நடத்தினார்கள் ஆனால் அவரும் பிறகு போய்விட்டார்கள்.
8. தாமுனா குடும்ப இராமசந்திர பிள்ளை தான் தன்னுடைய அரசி மில் ஆலை யில் இடம் கொடுத்து விவேகானந்தா பழக்கடை குடும்பத்தை சேர்ந்த ஆசிரியர் பயிற்சி பிஎட் படித்த ராஜேந்திரன்( திருவாரூர் கமலா புரத்தில் அரசு பள்ளியில் பணியாற்றியவர்) , வேதாரத்தினம்(பல ஆண்டு ஆயக்காரன்புலம் அரசு மேல்நிலை பள்ளியில் கணக்கு ஆசிரியர்) கிருஷ்ணமூர்த்தி(நீண்ட நாட்கள் எனது மச்சான் ரூபி ரோஸி ஏஜென்ஸியில் வேலைபார்த்தவர்) இவர்கள் மூவரும் தான் ஆயிலர்* டியுசன் சென்டர்(ETA) [*சுவிட்சர்லாந்து நாட்டுக் கணித அறிஞர் லியனார்டு ஆயிலர் (Leonhard Euler) கணிதத் துறையில் ஈடுபடாத பிரிவே இல்லை என்று கூறினால் அது மிகையாகாது.] (என்பதைப் தானாமுனா மில்லில் நடத்தினார்கள். இவர்கள் கல்வி பயிற்சியின் காரணமாக தான் நாங்கள் 10 தேர்வில் வெற்றி பெற்றோம். பள்ளிக்கூடத்தில் ஒரு ஆசிரியர் கூட இல்லை என்பது தான் உண்மை. இந்த டியூசன் சென்டர் தான் பொதுத்தேர்விற்கு வெற்றி கொடுத்து முதல் செட்டிற்கு..1986 முதல் 10 வது செட் வெளிவந்தது. முதல் மதிப்பெண் அப்போது பெற்றது என்னை விட வயதில் மூத்தவர் ஆனால் ஒன்றாக படித்த (வைதேகி மண்டபம் எதிர் வீடு) சேகு தம்பி அலீம். பெரியகுத்தகை முதல் யாதவபுரம் வரை படித்தவர்கள் அதிகம் தோப்புத்துறை மாணவர்கள் தான். இடையில் 10 வந்த உடன் சிலர் வெளிநாடு போக போகிறோம் என்று படிக்காமல் போய்விட்டார்கள்.
9. பள்ளிக்கூடம் போக நாங்கள் படித்தது முழுவதும் அரசி மில் மற்றும் நெல் காய வைக்கும் சிமெண்ட் தரையில் தான். இடையில் தமிழ் ஆசிரியராக டியூசன் சென்டருக்கு மூன்றாம் தெரு சோபா ஆசிரியர் அவர்களின் மகன் தமிழரசன் அவர்கள் எங்களுக்கு தமிழ் சொல்லிக் கொடுத்தவர்.
10. எங்களுக்கு முழு உதவியை இரவு பகல் 24/7 என்று பார்க்காமல் இராமச்சந்திர பிள்ளை தான் உதவி செய்தார்கள். பிறகு தனியாக டியுனுக்கு என்று ஒரு கூரையில் 4 வகுப்புடன் காட்டியும் கொடுத்தார்கள். அவர்களின் பையன் சௌந்தராஜன் மற்றும் பக்தாவச்சலம் மூலம் எங்களுடன் படித்தார்கள்.
11. தோட்ட ஆசிரியர் தான் தனிப் பொறுப்புடன் எங்களுக்கு உதவியாக இருந்தார்கள். கல்வி வகையில் பாடம் நடத்த வில்லை என்றாலும் சுய ஒழுக்கம் பண்பாடு என்று அடிக்கடி நிணைவுப்படுத்தி நீதி போதனைகளை செய்தார்
12. நடுநிலை பள்ளியாக இருந்த போது ஒரு ஆஸ்பாரசிட் கட்டிடம் 7 -8 வகுப்பு, 6 இரண்டு பிரிவு கூரையில் இருந்து பிடித்தோம்.
13. பாய் பிரதர்ஸ் ஜெய்னுதீன் அவர்கள் ஒப்பநத அடிப்படையில் தான் இரண்டு கட்டிடம் கட்டிக் கொடுத்தார்கள். இவர் தான் முஸ்லிம் பள்ளிக்கூடத்திற்கு அரசு ஒப்பந்ததாரர் என்று கட்டி கொடுத்தார்கள்.
14. 8 வகுப்பில் இருந்த கண்ணன் அவர்கள் தலைமையாசிரியரா இருந்தவர் கரும்பபுலத்தில் உயர்நிலை பள்ளி வந்தவுடன் அங்கு போய்விட்டார்.
15. 8 வகுப்பு ஆசிரியர் கர்ணன் (அறிவியல் நன்றாக சொல்லிக் கொடுப்பார்கள்) நீண்ட நாட்கள் பணியில் இருந்தவர் நடுநிலை பள்ளியில் அதைபோல் கணக்கு ஆசிரியர் மற்றும் ஆங்கில ஆசிரியராக அப்துல் ரஹ்மான், அறிவியல் ஆசிரியராக செய்து முகம்மது , டி பாலசுப்பிரமணியன் (டிஎஸ்பி), (ஸ்கவுட் ஆசிரியர் நான், ஒபி இக்பால் இரண்டு முஸ்லிம் மாணவர்கள் மட்டுமே இருந்தோம் 6 வது படிக்கும் போது) தோப்புத்துறை சந்திரசேகர் பிடி சார், தோட்ட ஆசிரியர் போன்றவர்களுடன், யாதாவா பும் கோதாண்டபாணி போன்றவர்கள் கூடுதல் வருடங்கள் இந்த நிடுநிலை பள்ளியில் பணியாற்றிவர்கள்.
16. எங்களுடைய செட் பெற்ற வெற்றியின் காரணமாகவே தான் அதற்கு அடுத்த வருடங்களில் நிறைய பேர்கள் பள்ளியில் சேர்ந்தார்கள்.
17. கடந்த சில வருடங்களுக்கு முன் மாதிரி பள்ளி அந்தஸ்தில் மேல்நிலை மாதிரி பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
18. நிறைய பேர்கள் இந்த பள்ளி பற்றிய உண்மை மறந்து தவறான தகவல்களை பகிர்ந்து வருகிறார்கள்.
19. தானாமுனா இந்து ஒன்றிய பள்ளி நீண்ட காலம் நல்ல தண்ணீர் குளம் தெருவில் இருந்தது. வாடகை கட்டிடம்
20. தற்போது ஐஒபி இருக்கும் பக்கத்தில் இருந்த பொது குளத்தில் மண் இட்டு நிரப்பி தான் தற்போது இருக்கும் இந்து துவக்க பள்ளி கட்டிடம் அரசு மூலம் கட்டப்பட்டது. அந்த வடிகால் குளம் என்பது மாரியம்மன் குளம் மழைகாலத்தில் நிரம்பியவுடன் அது முதலில் இந்த குளத்தில் வநத பிறகு இது நிரம்பி வழிந்து தான் சீவன் தெற்கு வீதி மூலம் சாறுக்கையில் ஒடி உப்பாறு க்கு செல்லும்.
21. 8 வரை இந்து முஸ்லிம் இருபாலரும் நம்ம நடுநிலை பள்ளியில் படித்தவர்கள் தான் அதற்கு பிறகு இந்து பிள்ளைகள் குருகுலம் போகும். முஸ்லிம் பிள்ளைகளை படிக்க விடமாட்டார்கள்.
22. சுற்றுச்சுவர் முதலில் துபாய் முஸ்லிம் தோப்புத்துறை முதலில் நாகை ரோட்டில் கட்டியது பிறகு வடக்கு பக்கம் ஒவ்வொரு நபரின் நன்கொடை மூலம் பகுதியாக கட்டப்பட்டது.
23. இந்து முஸ்லிம் ஒற்றுமையை பேண சுற்று முறையில் அதுவும் படிக்கும் பிள்ளைகளின் பெற்றோர் தான் பிடிஏ தலைவர் பொறுப்பில் சுற்று முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்து ஒன்றிய பள்ளி முதல் நடுநிலை/ உயர்நிலை பள்ளி வரை - அமெரிக்கா காயிதே மில்லத் பேரவை அமைப்பாளர் தோப்புத்துறை.அ.முகம்மது நூர்தீன்
கல்வி ஒருவரை உயர்வு படுத்தும், எனக்கு ஆரம்ப கல்வி முஸ்லிம் ஸ்கூல் பிறகு நடுநிலை பள்ளி அரசு நடுநிலை பள்ளி தோப்புத்துறை சிறிது காலம் வேதாரண்யம் மேல்நிலை பள்ளி மீண்டும் 10 வது தோப்புத்துறை உயர்நிலைப்பள்ளி பிறகு 11,12 வேதாரண்யம் என்று அரசு பள்ளியே நம்மை போன்றவர்களுக்கு வழிகாட்டி இந்த ஒரு வகையில் பிரதிபலிக்க வகை செய்த அடித்தளம் என்பதை நன்றியுடன் நினைவு கூறி நம் பள்ளி பற்றிய உண்மை வரலாறு, அது இன்றைய சமுதாயத்திற்கு வழிகாட்டும்.
தோப்புத்துறை அரசு உயர்நிலை பள்ளியில் தொடங்கிய எனது கல்வி பொது நல பணி, அல்நூல் பள்ளி மேல்நிலை பள்ளி வரை சேவை தொடர்கிறது, வசதி வாய்ப்பை விட இந்த பாக்கியம் தந்த இறைவனுக்கு நன்றி
Subscribe to:
Posts (Atom)
-
புனிதமிக்க ரமலான் தினங்களில் நம்மிடையே சுயபரிசோதனை https://www.amazon.com/dp/ B08BNP1TGV/ref=sr_1_1?Adv- Srch-Books-Submit.x=22&Adv-...